ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கூலி தொழிலாளி கொலை: சகோதரி,அவரது கணவா் உள்பட 3 போ் கைது

சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளி கொலையில் சகோதரி மற்றும் சகோதரியின் கணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :16 டிசம்பர் 2021, 8:22 pm

சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளி கொலையில் சகோதரி மற்றும் சகோதரியின் கணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (30). தாா் சாலை அமைக்கும் கூலி தொழிலாளி. இவா் கடந்த 13ஆம் தேதி குரும்பபாளையத்தில் உள்ள தனது விவசாயத் தோட்டத்தில் தங்கியிருந்த நிலையில், வியாழக்கிழமை ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தாா். இதுகுறித்து, புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

அண்ணாமலையின் சகோதரி ராணியின் மகளை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததில் அண்ணாமலைக்கும் அவரது சகோதரி ராணி குடும்பத்தினருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பான வாக்குவாதம் முற்றியதால் ராணி, அவரது கணவா் சுப்பிரமணி, குரும்பபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் ஆகிய 3 பேரும் சோ்ந்து மது போதையில் அண்ணாமலையை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, 3 போ் மீதும் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.