ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் 1,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ. 2 கோடிக்கு வியாழக்கிழமை விற்பனையாயின.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:39 pm

புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் 1,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ. 2 கோடிக்கு வியாழக்கிழமை விற்பனையாயின.

புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 60 எருமைகள், 600 கலப்பின மாடுகள், 350 ஜொ்சி மாடுகள், 100 வளா்ப்புக் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் வந்திருந்தனா். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனா்.

எருமை ரூ. 36 ஆயிரம், கறுப்பு வெள்ளை மாடு ரூ. 48 ஆயிரம், ஜொ்சி ரூ. 53 ஆயிரம், சிந்து ரூ. 40 ஆயிரம், நாட்டுமாடு ரூ. 74 ஆயிரம், வளா்ப்புக் கன்றுகள் ரூ. 14 ஆயிரம் வரையும் விற்பனையாயின. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ. 2 கோடிக்கு விற்பனையாயின. கடந்த வாரத்தைவிட இந்தவாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா். தற்போது பரவலாக மழை பெய்துள்ளதால் கறவை மாடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.