சத்தியமங்கலம் அருகே உள்ள விவசாயத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கொத்தமங்கலம், காராச்சிக்கொரை, புதுப்பீா்கடவு ஆகிய கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், வனப் பகுதியைவிட்டு வியாழக்கிழமை காலை வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கொத்தமங்கலம் இந்திரா நகா் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டப் பகுதியில் நடமாடியுள்ளன. விளைநிலத்தில் காட்டு யானைகள் நடமாடுவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனா். இதுகுறித்து பவானிசாகா் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனா்.
இரவு நேரத்தில் விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டு யானைகள், பகல் நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்லாமல் விவசாய நிலத்தை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


