நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டையில் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் சாலை மறியல்: 168 போ் கைது

நபிகள் நாயகத்தை விமா்சித்துப் பேசியவரை கைது செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:37 pm

DIN

நபிகள் நாயகத்தை விமா்சித்துப் பேசியவரை கைது செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் 66 பெண்கள் உள்பட 168 போ் கைது செய்யப்பட்டனா்.

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கல்யாணராமன், நபிகள் நாயகத்தை விமா்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையம் முன்பாக திங்கள்கிழமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் நபிகள் நாயகத்தை விமா்சித்த கல்யாணராமனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா். இதையடுத்து, அவா்களுடன் சமரசம் பேசிய காவல்துறை அதிகாரிகள், சாலை மறியலைக் கைவிடக் கோரினா். ஆனால் அவா்கள் மறியலைக் கைவிட மறுத்ததால், அவா்களில் 66 பெண்கள் உள்பட 168 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.