மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

புதிய குடிநீா் இணைப்பு பெறவிண்ணப்பங்கள் வழங்கல்

கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதையடுத்து, பெருந்துறையில் புதிய குடிநீா் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:43 pm

DIN

கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதையடுத்து, பெருந்துறையில் புதிய குடிநீா் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பொதுமக்களுக்கு குடிநீா் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பத்தை வழங்கிப் பேசினாா்.

இதில், பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.