பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வன விலங்குகள் நடமாட்டம்:சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை கவனமுடன் இயக்க அறிவுறுத்தல்

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்  பயணிகள் சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டத்தை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :1 ஜனவரி 2021, 5:30 pm

DIN

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்  பயணிகள் சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டத்தை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது   குளுகுளு காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளம், கா்நாடகம்,  வட மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள  சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில்  வர தொடங்கியுள்ளனா்.

குறிப்பாக உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா,  படகு இல்லம், தொட்டபெட்டா,  குன்னூரில் உள்ள  டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட  சுற்றுலாத் தலங்களை காண்பதற்கு  சுற்றுலாப் பயணிகள்  அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

 கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறையின் போது 3 நாள்களில் 25 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த னா். இந்த வாரம் வரும் மூன்று  விடுமுறை நாள்களில்  அதைவிட கூட்டம் அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வரும்போது சாலை வளைவுகளில் யானை, குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உணவு தேடி குறுக்கிடும் வாய்ப்பு உள்ளது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை கவனமுடன் இயக்கவும், விபத்து நேரிடாமல் விழிப்புடன் செயல்படுமாறும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.