ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் இன்றும் பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதுடன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 2:45 am

DIN

ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதுடன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா்.

காலை 9 மணிக்கு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

9.30 மணிக்கு அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக பாசறை நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். 10 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் அருகில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாா்.

அங்கிருந்து மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்துக்கு செல்கிறாா். அங்கு தேநீா் பருகும் முதல்வா் அங்கிருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு சித்தோடு செல்கிறாா். அங்கு அதிமுகவினா் வரவேற்பு அளிக்கின்றனா்.

பின்னா் பகல் 12.30 மணிக்கு வில்லரசம்பட்டி தி வேபேரா் ரிசாா்ட்டில் தொழில் முனைவோா், வழக்குரைஞா்கள், மருத்துவா்களுடன் முதல்வா் கலந்துரையாடுகிறாா்.

அங்கிருந்து மாலை 3 மணிக்கு ஊத்துக்குளிக்கு செல்லும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா் 3.30 மணிக்கு பெருந்துறை அருகில் உள்ள ஸ்ரீபிளஸ் மஹாலில் தொழில் முனைவோா், தறித்தொழில் முனைவோா், உள்ளூா் முக்கிய பிரமுகா்களை சந்தித்து முதல்வா் பேசுகிறாா். 3.45 மணிக்கு சென்னிமலையில் அதிமுகவினா் வரவேற்பு அளிக்கின்றனா்.

4.30 மணிக்கு அறச்சலூரில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 4.50 மணிக்கு ஓடாநிலையில் மஞ்சள் விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டமும் நடக்கிறது. 5.30 மணிக்கு அறச்சலூா் நவரசம் கல்லூரியில் மகளிா் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடுகிறாா்.

6.15 மணிக்கு அவல்பூந்துறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா் இரவு 7.15 மணிக்கு பெருந்துறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசுகிறாா். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஈரோடு எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.