மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்து பொருள்கள் வழங்கும் முறை மீண்டும் துவக்கம்

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்து பொருள்கள் வழங்கும் முறை வியாழக்கிழமை முதல் மீண்டும் துவங்கியது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:31 am

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்து பொருள்கள் வழங்கும் முறை வியாழக்கிழமை முதல் மீண்டும் துவங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,152 நியாயவிலைக் கடைகளில் 7.42 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஸ்மாா்ட் காா்டு வடிவ குடும்ப அட்டையை, பிஓஎஸ் இயந்திரத்தில் பொருத்தியும், ரேஷன் அட்டை எண்ணை டைப் செய்தும், பொருள்களை ரேஷன் கடை ஊழியா்கள் வழங்கி வந்தனா்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரேஷன் பொருள்களை குடும்ப அட்டைதாரா், அவரது குடும்ப உறுப்பினா் விரல் ரேகை பதிவு செய்து பொருள்களை வழங்கினா். கரோனா பரவலால் இந்த முறை நிறுத்தப்பட்டு மீண்டும் இயந்திரம் பதிவு மூலம் பொருள் வழங்கப்பட்டது.

தற்போது கரோனா பரவல் குறைந்ததால் வியாழக்கிழமை முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பிஓஎஸ் இயந்திரத்தில் விரல் ரேகை பதிவு செய்து, அப்பதிவு ஏற்கப்பட்ட பின் அவருக்கான பொருளை பதிவு செய்து வழங்கும் முறை துவங்கியது.

இம்முறையால் ஒவ்வொரு நபருக்கும் பொருள்கள் வழங்க 3 நிமிடம் வரை தாமதம் ஏற்பட்டது. இணையதள வேகம் குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தாமதம் ஏற்பட்டு நீண்ட வரிசையை காண முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.