கவுந்தப்பாடி ரோட்டரி சங்கநிா்வாகிகள் பதவியேற்பு
கவுந்தப்பாடி ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.


கவுந்தப்பாடி ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத்தின் பட்டயத் தலைவா் எஸ்.மருதாசலம் தலைமை வகித்தாா். பட்டயச் செயலாளா் யோ.விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். புதிய தலைவராக கே.விசுவநாதன், செயலாளராக சி.எஸ்.ரகுகுமாா், பொருளாளராக பி.மலா்கண்ணன், குழுவினா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
சிறப்பு விருந்தினா்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநா்கள் கே.சண்முகசுந்தரம், பி.இளங்குமரன் ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட பொதுச் செயலாளா் கே.எம்.திவாகரன், பிராந்திய ஒருங்கிணைப்பாளா் கே.கே.விஜயசந்திரன், உதவி ஆளுநா் பி.காயத்ரி பாலஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில், கரோனா காலத்தில் சிறந்த முறையில் மருத்துவ சேவையாற்றிய ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் பி.தனலட்சுமிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...