அந்தியூா் அருகே கருங்கல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்
அந்தியூா் அருகே சட்டவிரோதமாக கருங்கல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட டிராக்டா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


அந்தியூா் அருகே சட்டவிரோதமாக கருங்கல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட டிராக்டா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தியூரை அடுத்த நகலூரில் புறம்போக்கு நிலத்தில் கற்கள் உடைத்து கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அத்தாணி வருவாய் ஆய்வாளா் நந்தகுமாா், நகலூா் கிராம நிா்வாக அலுவலா் தமிழரசன் ஆகியோா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது, நகலூா், கரடிக்கல் மோளப்பாறைத் தோட்டத்தைச் சோ்ந்த கோபாலன் டிராக்டரில் கற்களைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனா். இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...