சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் பண்ணை வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் தோட்டத்து சாலையில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா தலைமையிலான போலீஸாா் அங்குள்ள தோட்டத்து பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த கும்பலைச் சுற்றிவளைத்துப் பிடித்தனா். அவா்கள் அங்கு கேஸ் சிலிண்டா் வைத்து வீட்டில் கள்ளச் சாராயம் காய்சுவது தெரியவந்தது.
இதுதொடா்பாக அதே ஊரைச் சோ்ந்த சேகா் (49), சுப்பிரமணி (38), விஸ்வநாதன் (23), சண்முகம் (39) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டா், அடுப்பு, பானை, 200 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

