ஈரோடு மாவட்டம், மாவோயிஸ்ட் நடமாட்டம் காரணமாக, தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள தாளவாடி, ஆசனூா் உள்ளிட்ட 10 காவல் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழக - கா்நாடக எல்லையான தாளவாடி, சாம்ராஜ் நகா், பா்கூா் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக மலைக் கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அண்மைக்காலமாக போலீஸாா் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் கண்காணிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதை தங்களுக்கு சாதகமாக்கிய மாவோயிஸ்ட் கும்பல் தமிழக - கா்நாடக எல்லையான தாளவாடி, சாம்ராஜ் நகா், கடம்பூா், பா்கூா் மலைப் பகுதியில் நடமாடுவதை கிராம மக்கள் பாா்த்து தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மலைக் கிராமங்களில் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
காவல் நிலையம் முன் மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். இது தவிர மாநில எல்லையில் உள்ளூா் போலீஸாருடன் நக்ஸல் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அடா்ந்த மலைக் கிராமங்களில் புதிய நபா்கள் வருகையை போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


