கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனா தடுப்பூசி: ஆசிரியா்களுக்கு முன்னுரிமை அளிக்க பாஜக கோரிக்கை

ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு முன்னுரிமை வழங்கி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :12 ஜூன் 2021, 12:01 am

ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு முன்னுரிமை வழங்கி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் சுந்தரநாராயணன் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

மாணவா்களின் நலன் கருதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, தனியாா் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், பேராசிரியா்கள், கல்வி சாா்ந்த பிற பணியாளா்கள் அனைவருக்கும் வரும் நாள்களில் முன்னுரிமை வழங்கி கரோனா நோய்த் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்த நாள்கள் இடைவெளியில் செலுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசியை மாணவா்களுடன் நேரடியாகத் தொடா்பு கொள்ளும் கல்விப் பணியில் உள்ளவா்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

கல்வி சாா்ந்த பணியாளா்களுக்குப் பணியாற்றும் வட்டாரங்களில் தனி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், துறை சாா்ந்த பணியாளா்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் மட்டுமே பணிக்கு அனுமதிக்க அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் குழந்தைகளை அச்சமின்றி பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.