ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பவானிசாகரில் தடுப்பூசி மையம் அமைக்கக் கோரிக்கை

 பவானிசாகரில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :17 ஜூன் 2021, 11:19 pm

 பவானிசாகரில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநருக்கு வியாழக்கிழமை அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது:

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 15 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் கரோனா தடுப்பூசி, புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மட்டும் செலுத்தப்படுகிறது.

பவானிசாகா் ஒன்றியத்தில் புன்செய் புளியம்பட்டி, பவானிசாகா் ஆகிய இரு மையங்களாக பிரிந்து அமைந்துள்ளன. தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் இரு மருத்துவமனைகளும் புளியம்பட்டி மையத்திலேயே அமைந்துள்ளன.

பவானிசாகா் மையத்தில் கொத்தமங்கலம் , புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம், உத்தண்டியூா் ஆகிய ஊராட்சிகளும், பவானிசாகா் பேரூராட்சியும் அமைந்துள்ளன. இவா்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு புளியம்பட்டி செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, பவானிசாகா் பகுதியில் உள்ள ஐந்து ஊராட்சி, ஒரு பேரூராட்சிப் பகுதி மக்களுக்கு வசதியாக பவானிசாகரில் உள்ள அரசு மருந்தகத்திலோ அல்லது அரசுப் பள்ளியிலோ தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.