மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பெருந்துறையில் தோ்தல் பிரசார இடம் ஒதுக்கிடு

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை மேற்கொள்ள பெருந்துறையில் 7 இடங்களை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:06 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை மேற்கொள்ள பெருந்துறையில் 7 இடங்களை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் பொதுக் கூட்டம், பிரதான மேடை அமைத்து பிரசாரம் மேற்கொள்ள 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். இதற்காக 61 இடங்களை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதன்படி, பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறையில் பங்களா வீதி, காஞ்சிக்கோவில் கிழக்கு ரத வீதி (தேரடி திடல்), விஜயமங்கலம், திங்களூா் நால்ரோடு சந்திப்பு, சென்னிமலை கிழக்கு ரத வீதி, சென்னிமலை பேருந்து நிறுத்தம் அருகில், வெள்ளோடு மாரியம்மன் கோயில் திடல் ஆகிய 7 இடங்களைத் தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேற்கண்ட இடங்களில் அரசியல் கட்சியினா் பொதுக் கூட்டங்கள் நடத்த தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முன்னுரிமைப்படியே அனுமதி வழங்கப்படும். சிறிய, பெரிய கட்சிகளாக இருந்தாலும், முன்னதாக ஒரு கட்சியினா் குறிப்பிட்ட இடத்துக்கு விண்ணப்பித்திருந்தால் வேறு கட்சிக்கு அவ்விடம் வழங்கப்படாது. இவ்வாறு தோ்தல் ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.