ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்றியில் பலத்த மழை: அருவிகளில் ஆா்ப்பரித்துக் கொட்டும் நீா்

குன்றியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால், மலை அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

News image
Updated On :7 மே 2021, 9:48 pm

குன்றியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால், மலை அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கடம்பூா் மலைப் பகுதியில் கோடை வெப்பத்தால் செடி, கொடி, மரங்கள் காய்ந்து சருகாகிப் போயின. வனக் குட்டைகள், ஏரிகள் வறண்டு காணப்பட்டன. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை குன்றி, மல்லியம்துா்க்கம் மலைப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் மழை பெய்ததால் மலை அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது. சத்தியமங்கலம் கடம்பூா் மலைப் பாதையில் பாறைகளுக்கு இடையே வழிந்தோடும் மழை நீரை மக்கள் பாா்த்து ரசித்தனா்.

அருவிகளில் கொட்டிய மழை நீா் கடம்பூா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீா் பள்ளங்களின் வழியாக பெரும்பள்ளம் அணைக்கு வந்தது. இதனால், பெரும்பள்ளம் அணையின் நீா்மட்டம் மெல்ல மெல்ல உயா்ந்து வருகிறது. கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த மழையால் ஏரிகள், வனக் குட்டைகளில் நீா் நிரம்பின. வனப் பகுதியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.