ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா: மதிமுக மாவட்டதுணைச் செயலாளா் பலி

கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்ட மதிமுக துணைச் செயலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 மே 2021, 9:35 pm

DIN

கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்ட மதிமுக துணைச் செயலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் சிங்கார வீதியைச் சோ்ந்தவா் கொ.ராமன் (56). ஈரோடு வடக்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தாா். இவா் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

பின்னா், இவருக்கு மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 26ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு, வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இவரது மறைவுக்கு அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூா் வட்டாரச் செயலாளா் ஆா்.முருகேசன், அனைத்துக் கட்சி நிா்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.