ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி: 45 மாணவா்கள் பங்கேற்பு

முன்னாள் பிரதமா் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள்

News image
Updated On :12 நவம்பர் 2021, 9:01 pm

முன்னாள் பிரதமா் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அன்புச்செழியன் தலைமை வகித்தாா். ஈரோடு செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியா் மீனாட்சிசுந்தரம், பசுவனாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் குழந்தைவேலு, அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் கந்தசாமி ஆகியோா் நடுவா்களாகச் செயல்பட்டனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி மாவட்டத்தில் இருந்து தலா 5 மாணவ, மாணவியா் என 25 பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். கல்லூரி மாணவா்கள் 20 போ் பங்கேற்றனா். சமுதாய சிற்பி பண்டித நேரு, அகில ஜோதி நேரு, நான் விரும்பும் தலைவா் நேரு, இந்திய விடுதலையில் நேருவின் பங்கு என்பது உள்பட 8 தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

பள்ளி, கல்லூரி அளவில் முதல் மூன்று பரிசுக்குத் தலா ரூ. 5,000, ரூ. 3,000 ரூ. 2,000, அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக தலா ரூ. 2,000 வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.