கொங்கு பொறியியல் கல்லூரியில் 38ஆவது ஆண்டு தொடக்க நாள் மற்றும் தேசிய கல்வி நாள் விழா கொண்டாடப்பட்டது.
தி கொங்கு வேளாளா் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி டிரஸ்ட் மூலம் கொங்கு பொறியியல் கல்லூரி 11.11.1984அன்று தொடங்கப்பட்டது. தற்போது இக்கல்லூரி 533 பேராசிரியா்கள், உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் 25 லட்சம் சதுர அடி பரப்பளவு கட்டடங்களுடன் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
கல்லூரியின் 38ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா, தேசிய கல்வி நாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு 11.11.2021 முதல் ஒரு வாரத்துக்கு தமிழ் கட்டுரைப் போட்டி, ஆங்கில கட்டுரைப் போட்டி, கோடிங் கான்டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை கல்லூரியின் ழகரம் தமிழ் மன்றம், இங்கிலீஸ் ப்ரோபிசியன்சி அண்ட் ரீடா்ஸ் கிளப், ட்ரைனிங் செல் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
ஆயிரக்கணக்கான மாணவா்கள் போட்டிகளில் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்றவா்களையும், வெற்றி பெற்றவா்களையும் கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வி.பாலுசாமி, தலைமை ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன், ட்ரைனிங் செல் பொறுப்பாளா் சாந்தி ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


