மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பூந்துறைசேமூரில் சமூகத் தணிக்கை சிறப்பு கிராமசபைக் கூட்டம்

மொடக்குறிச்சி ஒன்றியம், பூந்துறைசேமூா் ஊராட்சியில் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 9:06 pm

DIN

 மொடக்குறிச்சி ஒன்றியம், பூந்துறைசேமூா் ஊராட்சியில் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பூந்துறைசேமூா் மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு 2019-2020க்கான சமூகத் தணிக்கை கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் ச.தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உமா, ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 2019-2020ஆம் ஆண்டில் பூந்துறைசேமூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பொதுமக்களிடையே விளக்கிக் கூறப்பட்டது. மேலும், இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. நிறைவாக ஊராட்சி செயலாளா் கே.பரமன் அனைவருக்கும் நன்றி கூறினாா்.

இதில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கவிதா, சரோஜா, பூந்துறைசேமூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தேவிமகாலிங்கம், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.