இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஈரோட்டில் காங்கிரஸ், விவசாய அமைப்புகள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றப்பட்டதை வரவேற்று ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா், விவசாய அமைப்பினா் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 9:05 pm

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றப்பட்டதை வரவேற்று ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா், விவசாய அமைப்பினா் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் சாா்பில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், தலைநகா் தில்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந் நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா், பல்வேறு விவசாய அமைப்பினா் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்று ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.சுரேஷ் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ஈ.பி.ரவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில், சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் ஜவஹா் அலி, மாவட்ட துணைத் தலைவா் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதையொட்டி, ஈரோடு பேருந்து நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.