இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஈரோட்டில் நவம்பா் 27 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் நவம்பா் 27ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

Updated On :19 நவம்பர் 2021, 9:04 pm

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் நவம்பா் 27ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் நவம்பா் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் முகாமில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளாா்.

முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியாா் துறை வேலை அளிப்பவா்கள் பங்கேற்று 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தங்கள் நிறுவனங்களுக்குத் தகுதியானவா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம்.

முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்படவுள்ளன.

முகாம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 2275860 என்ற தொலைபேசி எண் அல்லது ங்ழ்ா்க்ங்த்ர்க்ஷச்ஹண்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.