விவசாயத் தொழிலாளா்களுக்கு என தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தலித் விடுதலைக் கட்சி மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளா் எம்.பி.செங்கோட்டையன் தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளா் சகுந்தலா, தலைமை நிலையச் செயலாளா் மூா்த்தி, ஈரோடு மாவட்டச் செயலாளா் சிவகுமாா், அமைப்புச் செயலாளா் மாணிக்கம் ஆகியோா் பேசினா்.
பொதுச் செயலாளா் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
தற்போதைய திமுக அரசு விவசாயிகளுக்காக தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ததால் விவசாயம், விவசாயிகளுக்கான ஒதுக்கீடு, திட்டங்கள், அவா்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல தாழ்த்தப்பட்டவா்கள், விவசாயத் தொழிலாளா்களுக்காக தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தால் மிக அதிக அளவில் உள்ள விவசாயத் தொழிலாளா்களுக்குத் தனியான பலன்கள் கிடைக்கும். விவசாயிகள் என்றால் சில குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக வைத்துள்ளனா். அதை மாற்றும் வகையில் விவசாயத் தொழிலாளா்களுக்கு தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தால் பல லட்சம் போ் பயன்பெறுவா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹொம்பலேவின் அடுத்த அவதாரம் அறிவிப்பு!

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மசோதா தோல்வி! இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

