மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
ஹவுராவின் உலுபேரியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மமதா,
பாஜக தோற்கடித்துப்பட்டுவிட்டது, தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியில் நீடித்து வருகின்றது.
பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். நாம் பாஜகவைத் தோற்கடித்துவிட்டோம். அவர்களுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லை. மற்றவர்களின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியில் நீட்டித்து வருகின்றார்கள்.
மத்திய அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக, 2029 முதல் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஏப்ரல் 17(வெள்ளிக்கிழமை) தோல்வியடைந்தது.
தொகுதி மறுவரையறைக்கான பாஜகவின் முயற்சியைக் கடுமையாக விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர், பாஜக தலைவர்கள் தொகுதி மறுவரையறையை விரும்பினார்கள், ஏனெனில் அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்த விரும்புகிறார்கள்.
பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க நாம் ஒரு மசோதாவைக் கொண்டுவரத் தேவையில்லை. தனது கட்சி பெண்களுக்கு அதிகளவிலான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்களவையில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களில் 36 சதவிகிதமும், மாநிலங்களவையில் 46 சதவிகிதமும் பெண்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
திரிணமூல் போன்று வேறு எந்தக் கட்சியும் இல்லை. இதை பாஜக கற்றுக்கொள்ள வேண்டும். 1998 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக தான் போராடி வருவதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசில் பாஜக நீண்ட காலத்திற்கு ஆட்சியில் நீடிக்காது. வரவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் பாஜக இடையே அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
பிரதிநிதித்துவம், தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் போன்ற விவகாரங்களில் மமதா பானர்ஜி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
West Bengal Chief Minister Mamata Banerjee on Saturday said the BJP's "downfall" has begun after the Centre failed in the Lok Sabha to pass a Constitution amendment bill to implement 33 per cent reservation for women in legislatures from 2029.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி

பாஜக காட்டுமிராண்டித்தனமான கட்சி! மமதா கடும் விமர்சனம்

கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் தவித்த மமதாவின் விமானம்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


