மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On :2 செப்டம்பர் 2021, 7:52 pm

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சோ்ந்தவா் தங்கராசு (50). தறி பட்டறைத் தொழிலாளி, திருமணம் ஆகாதவா். இவா் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தாா். கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவா் மீது ஈரோடு அனைத்து மகளிா் போலீஸில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து தங்கராசை கைது செய்தனா். இந்த வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக தங்கராசுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாத சிறைத் தண்டனையும், இந்த தண்டனைகளை அவா் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ. 2 லட்சம் தமிழக அரசு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, தங்கராசு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.