தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சக்தி மசாலா நிறுவன தம்பதியினர் பீமரத சாந்தி விழா

சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி – டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோரின் பீமரத சாந்தி விழா, பெருந்துறை சென்னிமலை கவுண்டர் செல்லம்மாள் திருமண மாளிகையில் நடந்தது.

News image
சக்தி மசாலா நிறுவன தம்பதியினர் பீமரத சாந்தி விழா
Updated On :11 செப்டம்பர் 2021, 11:36 am

DIN

ஈரோடு: சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி – டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோரின் பீமரத சாந்தி விழா, பெருந்துறை சென்னிமலை கவுண்டர் செல்லம்மாள் திருமண மாளிகையில் நடந்தது.

வைபவத்தை, பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான அர்ச்சகர் செல்வசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். அதிகாலையில் கோ–பூஜை, சூரிய நமஸ்காரத்துடன் துவங்கி, கணபதி ஹொமம், நவக்கிரக ஹோமம் போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. பின், கலச தீர்த்த அபிஷேகம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோதானம் மற்றும் பவளமணி தாரணம் ஆகியவை, தம்பதியர் இருவருக்கும் நடத்தப்பட்டது.

முக்கிய நிகழ்வாக, பவளமணி தாரணத்தை பிரபல நடிகர் சிவகுமார் – திருமதி லட்சுமி சிவகுமார் தம்பதியர் அணிவித்தனர். விழா மலரை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், அரிமா.என்.முத்துசாமி, டாக்டர் பி.ஜி.விஸ்வநாதன் – முத்துலட்சுமி விஸ்வநாதன், மூத்த வழக்குரைஞர் காந்தி, சாரதா காளிமுத்து, எஸ்.கே.ஆர்.குமார் மற்றும் குடும்ப மூத்த உறுப்பினர்கள் தம்பதியரை ஆசீர்வாதம் செய்தனர்.

ரமேஷ் பிரபா தம்பதியினர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவூதீன், பரணி பாலு தம்பதியினர், டாக்டர் கணபதி குடும்பத்தினர், கேசவன் தம்பதியினர், டாக்டர் அருணாதேவி, டாக்டர் மங்கள், டாக்டர் அஞ்சு தம்பதியினர், டாக்டர் செந்தில்வேலு தம்பதியினர் ஆசிர்வாதம் வழங்கினர்.

முதல் நாள் மாலை சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநர் செந்தில்குமார், பெற்றோரை போற்றி உருவாக்கிய குறும்படம் தீபா, சுவாமி, சுருதி, செங்கதிர் வேலன் பாடிய பாடல்கள் மற்றும் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் கடந்து வந்த பாதையை ஒளி–ஒலி காட்சியாக திரையிட்டனர்.

ஏற்பாடுகளை மகள் சக்திதேவி, மருமகன் இளங்கோ, மகன் செந்தில்குமார், மருமகள் தீபா, மைத்துனர் வேணுகோபால், கெளசல்யா தம்பதியினர், பேத்திகள் சுவாமி, சுருதி, பேரன் செங்கதிர் வேலன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.