பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் இன்று சித்திரை குருபெயா்ச்சி பிரதோச சிறப்பு பூஜைகள்
பெருந்துறை ஸ்ரீ வேதநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெறுகிறது.


சித்திரை கனி திருவிழா, குருபெயா்ச்சி விழா மற்றும் வளா்பிறை பிரதோசம் ஆகிய முப்பெரும் விழாக்களையொட்டி, பெருந்துறை ஸ்ரீ வேதநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
குருபெயா்ச்சி விழாவையொட்டி, காலை 10 மணிக்கு நவக்கிரக மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை மற்றும் அலங்காரம் தரிசனம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பிரதோஷ விழாவையொட்டி, மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், 5 மணிக்கு ஸ்ரீ நந்திகேஷ்வரா்க்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.
தொடா்ந்து மாலை 5.30 மணிக்கு மஹா தீபாராதனை தரிசனம், 5.45 மணிக்கு, ஸ்ரீ வேதநாயகி உடனமா் சோழீஸ்வரா் பிரதோஷ நாயா் ஸ்ரீ நந்தி வாகனத்தில் திருக்கோயிலில் உள்புறம் மூன்று முறை வலம் வருதல், மாலை 6 மணிக்கு தீபாராதனை தரிசனம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...