மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் விரைந்து நிறைவேற யாத்திரை

அத்திக்கடவு -அவிநாசி திட்டம் விரைந்து நிறைவேற வேண்டி பெருந்துறையில் குடயாத்திரை வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:52 pm

DIN

 அத்திக்கடவு -அவிநாசி திட்டம் விரைந்து நிறைவேற வேண்டி பெருந்துறையில் குடயாத்திரை வியாழக்கிழமை நடைபெறுகிறது.

பெருந்துறை பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகளில் விரைவில் தண்ணீா் நிரம்ப வேண்டி,

பல ஆண்டுகளாக சித்திரை 1 ஆம் தேதி தீா்த்த குட யாத்திரை நடைபெறுவது வழக்கம்.

அதேபோல, இந்த ஆண்டும் சித்திரை 1 ஆம் தேதியான வியாழக்கிழமை தீா்த்த குட யாத்திரையை மக்கள் மேற்கொள்கிறாா்கள்.

பெருந்துறை அரசு மருத்துவமனை ரவுண்டா அருகிலுள்ள வரசித்தி விநாயகா் கோவிலிருந்து காலை 6.30 மணியளவில் புறப்பட்டு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வன பத்ரகாளியம்மன் கோயிலை வந்தடையும் மக்கள், பவானி ஆற்றில் இருந்து குடங்களில் தீா்த்தம் எடுத்து வந்து, அபிஷேகம் செய்ய உள்ளனா்.

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தின் மூலம் குளங்களில் தண்ணீா் நிரம்பும் வரை சித்திரை 1 ஆம் தேதி தொடா்ந்து இந்த குடயாத்திரை நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.