மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டி: தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்குப் பாராட்டு

 சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பள்ளி மாணவிக்கு விளக்கேத்தி ஊராட்சி மன்றம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:46 pm

DIN

 சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பள்ளி மாணவிக்கு விளக்கேத்தி ஊராட்சி மன்றம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

நேபாள நாட்டில் சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டி பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 10ஆம்தேதி வரை நடைபெற்றது.

இதில் இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சாா்ந்த 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் இந்தியா சாா்பில் பங்கேற்ற மொடக்குறிச்சியை அடுத்த விளக்கேத்தி ஊராட்சி, ஓலப்பாளையத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவி கோமதி (19), சிலம்பம் சுருள்வாள் போட்டி பிரிவில் தங்கப்பதக்கம் வென்றாா்.

இதையொட்டி விளக்கேத்தி ஊராட்சி மன்றத்தின் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு, ஊராட்சித் தலைவா் சுப்பிரமணி தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக குலவிளக்கு கவுன்சிலா் நடராஜ், விளக்கேத்தி கூட்டுறவு வங்கித் தலைவா் செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் பெற்ற கோமதிக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை ரூ.5ஆயிரம் வழங்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சண்முகம், ஊராட்சி செயலாளா் கீதாரஞ்சனி மற்றும் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.