அந்தியூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: இருவர் பலி
அந்தியூர் அருகே இருசக்கர வாகனம் மீது எதிரில் வந்த லாரி மோதியதில் அரசு பேருந்து நடத்துனர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.


பவானி: அந்தியூர் அருகே இருசக்கர வாகனம் மீது எதிரில் வந்த லாரி மோதியதில் அரசு பேருந்து நடத்துனர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
ஒலகடம், நாகிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் ரவி (45). அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கார்த்தி (35). அந்தியூர் கிளையில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றுகிறார். இருவரும் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் அந்தியூரில் இருந்து நாகிரெட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்தியூர் - அம்மாபேட்டை சாலையில் கெம்மியம்பட்டி அருகே சென்றபோது எதிரில் வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட கார்த்தி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...