ரயில்வே தானியங்கி பயணச் சீட்டில் தமிழ் மொழி இல்லாதது கண்டனத்துக்குரியது என தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:
ஈரோடு ரயில் நிலலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பிரிண்ட் ஆகிறது. தமிழில் பதிவு செய்யும் வசதி இல்லை. மாநிலத்தில் தமிழ் மட்டுமே தெரிந்த ஏழை, எளிய பயணிகள், தங்களது பயண சீட்டை புரியக்கூட முடியாத அவலம் தொடா்கிறது.
இச்செயல்பாடு கண்டனத்துக்குரியது. எனவே இந்த இயந்திர செயல்பாட்டை தடுத்து நிறுத்திவிட்டு தமிழில் பிரிண்ட் ஆகும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







