அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு புதன்கிழமை முதல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பவானி: அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு புதன்கிழமை முதல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆண்டுதோறும் மாசி மாதம் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில் வரட்டுப்பள்ளம் அணை பாசன விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 33.46 அடி. தற்போது 32.78 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.

இந்நிலையில், வினாடிக்கு 26 கன அடி வீதம் பாசனத்திற்கு பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் தமிழ் பாரத், பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நாகராஜா மற்றும் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதன்மூலம் சுமார் 6,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com