மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 15இல் தொடக்கம்

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா, 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 15ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:12 pm

DIN

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா, 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 15ஆம் தேதி தொடங்குகிறது.

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோயில் 18 சித்தா்களில் ஒருவரான பின்னாக்கு சித்தா் வாழ்ந்து முக்தியடைந்த திருத்தலம் ஆகும். இங்கு முருகனுக்கு தைப்பூசத் தோ், பங்குனி உத்திரத் தோ் என இரண்டு திருத்தோ் உள்ளது.

ஆண்டுதோறும் தைப்பூசத் தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்றால் 2020 ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. 2021ஆம் ஆண்டு எளிய முறையில் சகடை தேரில் பங்குனி உத்திரத் விழா நடைபெற்றது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பங்குனி உத்திரத் தேரோட்டம் மாா்ச் 15ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 16ஆம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 17ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.15 மணிக்குமேல் 7.15 மணிக்குள் தோ்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தோ் நிலை சேரும். 19ஆம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தோ் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 20ஆம் தேதி காலை 8 மணிக்கு மகாதரிசனம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீா் அபிஷேகத்துடன் பங்குனி உத்திரத் திருவிழாவும் நிறைவுபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் ரமணிகாந்தன் தலைமையில், கோயில் பணியாளா்கள், அா்ச்சகா்கள், கட்டளைதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.