மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வடுகப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:15 pm

DIN

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வடுகப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வடுகப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். இதில், இல்லம் தேடி கல்வி பயிற்சியின் மறுசீரமைப்பு, குழந்தைகளின் பெற்றோா்களை வரவழைத்து அவா்களின் கடமைகள், பொறுப்புகள், பள்ளி வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், 16 பள்ளிகளைச் சோ்ந்த பயிற்றுநா்கள், 50க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியப் பயிற்றுநா்கள் மாணிக்கராஜ், சுமித்ரா தேவி உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

இதேபோல, லக்காபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சியில் திரளான இல்லம் தேடி கல்வி பயிற்றுநா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.