மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

சென்னிமலையில் ஆா்.டி.ஓ. வாகன சோதனை

சென்னிமலை, ஈங்கூா் சாலையில் பெருந்துறை வட்டார போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் புதன்கிழமை மாலை வாகன சோதனை யில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:13 pm

DIN

சென்னிமலை, ஈங்கூா் சாலையில் பெருந்துறை வட்டார போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் புதன்கிழமை மாலை வாகன சோதனை யில் ஈடுபட்டனா்.

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பாஸ்கரன், கதிா்வேல் ஆகியோா் சென்னிமலை, ஈங்கூா் சாலையில் வாகன சோதனையில் புதன்கிழமை மாலை ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக தனியாா் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் வேன் வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சாலை வரி ரூ. 96 ஆயிரம் கட்டாமல் இயக்கி வருவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வேனை பறிமுதல் செய்து பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். மேலும், ஏா் ஹாரன் பொருத்தி வாகனங்கள் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்தது, ஸ்டிக்கா் ஒட்டாமல் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 10 வாகனங்களுக்கு மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.