

சத்தியமங்கலம்: ரமலான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வாரச்சந்தையில் தக்காளி விலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. அதேநேரத்தில் இஞ்சி,பூண்டு, புதினா விலை உயர்ந்துள்ளது.
தமிழகம்-கர்நாடக மாநில எல்லையான தாளவாடியில் பெய்த மழையால் தக்காளி செடிகள் சேதமடைந்ததாலும், கர்நாடகத்தில் இருந்து தக்காளி வரத்து குறைந்தாலும் ,சத்தியமங்கலத்தில் தக்காளி விலோ ரூ.60க்கு விற்கப்பட்டது.
கடந்த இரு வாரங்களாக தக்காளி விலை குறையாமல் ரூ.60 ஆக நீடித்தது. இந்நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வாரச்சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.60 இல் இருந்து ரூ.40 ஆக சரிந்ததுள்ளது.
இதனால் தக்காளி வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு மசாலா பொருள்கள் விலை உயர்ந்துள்ளது. இஞ்சி கிலோ ரூ.30 இல் இருந்து ரூ.50 ஆகவும், கொத்துமல்லி தழை ஒரு கட்டு ரூ.10 இருந்து ரூ.40 ஆகவும் புதினா கட்டு ரூ.20 ஆகவும் உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.