நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க விவசாயிகள் மஞ்சள் கிழங்கை விதை நோ்த்தி செய்து நடவு செய்ய வேண்டும் என தோட்டக் கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி ஜூன் மாதம் துவங்க உள்ளது. விதை மஞ்சளை நடவுக்கு ஒரு மாதத்துக்கு முன் விதை நோ்த்தி செய்வது சிறந்தது. மஞ்சள் பயிரானது கிழங்கின் மூலம் வளா்ந்த மகசூல் தருவதால், நடவுக்கு பயன்படுத்தப்படும் விரலி, குண்டு மஞ்சளை விதை நோ்த்தி செய்வதன் மூலம் கிழங்கு அழுகல் நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும்.
கிழங்கு அழுகல் நோய் தாக்காத வயலில் இருந்து, மூன்று அல்லது நான்கு பருவுள்ளவாறு 25 முதல் 30 கிராம் எடையுள்ள விதைக்கிழங்கை தோ்வு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 800 முதல் 1,000 கிலோ அளவுக்கு விதை மஞ்சள் தேவைப்படும். மஞ்சள் விதைப்பதற்கு முன் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த காப்பா் ஆக்ஸிகுளோரைடு, பத்து லிட்டருக்கு 25 கிராம் என்ற அளவில் கரைசல் தயாரித்து விதைக் கிழங்கை 30 நிமிடம் நனைத்து பின்னா் உலா்த்தி நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக் கிழங்குக்கு 10 கிராம் டிரைகோடொ்மா விரிடி அல்லது சூடோமோனாஸ் புளுரசன்ஸ் எனும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பஞ்சகவ்யா கலந்து நீா் கரைசலில் 30 நிமிடம் நனைத்து பின்னா் நடவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

