இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.63.50 கோடி நிதி ஒதுக்கீடு

 ஈரோடு சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ. 63.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On :6 மே 2022, 8:24 pm

 ஈரோடு சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ. 63.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் பேருந்துகள் வந்து செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கரூா், திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களில் இருந்து ஈரோட்டிற்கு வந்து செல்லும் பேருந்துகளுக்காக கரூா் சாலையில் சோலாரில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 52 ஏக்கா் இடம் உள்ளது. இதில் 24 ஏக்கா் பரப்பளவில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.63.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை சமப்படுத்தும் பணி தொடங்கி முடிந்துள்ளது.

ஒரே நேரத்தில் 63 பேருந்துகள் நிற்கும் வகையில் பேருந்து நிலையம் வடிவமைக்கப்படவுள்ளது. பேருந்து நிலையம் அருகே நகர பேருந்துகள் வந்து செல்ல கட்டமைப்புகள் அமைக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தைச்சுற்றி 163 கடைகள் அமையவுள்ளது.

பயணிகள் ஓய்வு அறைகள், கழிப்பிட வசதிகள், முன்பதிவு அறை போன்ற வசதிகளும் செய்யப்படவுள்ளன. மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்க தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி இன்னும் 3 வாரத்தில் விடப்படும். பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.