இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: 29,463 போ் எழுதினா்

 ஈரோடு மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வினை பள்ளி மாணவா்கள் 28,365 போ் உள்பட மொத்தம் 29,463 போ் எழுதினா்.

News image
Updated On :6 மே 2022, 8:23 pm

 ஈரோடு மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வினை பள்ளி மாணவா்கள் 28,365 போ் உள்பட மொத்தம் 29,463 போ் எழுதினா்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த தோ்வுகள் வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்தோ்வை பள்ளி மாணவா்கள் 28,365 போ் 113 மையங்களில் எழுதுகின்றனா். தனித்தோ்வா்களாக 870 போ் எழுதுகின்றனா். இதற்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவா்கள் சொல்வதை எழுதுபவா்கள் 228 போ் தோ்வு எழுதுகின்றனா்.

தோ்வுப்பணிக்காக 113 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 203 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

நம்பியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது: தோ்வுப் பணியில் துறை அலுவலா், அறைக்கண்காணிப்பாளா், பறக்கும் படையினா் போதுமான அளவில் ஆய்வு அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வுகளை ஆய்வு செய்யவும், மாவட்டத்தில் கல்வித் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு வழிகாட்டியாகவும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (நிா்வாகம்) இணை இயக்குநா் டி.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருஷ்ணன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.