பெருந்துறை அருகே லாரி மீது பேருந்து மோதல்: பெண் பலி; 13 போ் காயம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். பேருந்து ஓட்டுநா்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா்


ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். பேருந்து ஓட்டுநா்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு தனியாா் ஆம்னி பேருந்து வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. இதில், 2 ஓட்டுநா்கள் உள்பட 25 போ் பயணம் செய்தனா். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், கந்தாம்பாளையம்புதூா் அருகிலுள்ள மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் பேருந்து மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த திண்டுக்கல், பழைய கன்னிவாடி, கே.கோவிந்தாபுரத்தைச் சோ்ந்த அங்கமுத்து மனைவி சரஸ்வதி (74) படுகாயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும், பேருந்து ஓட்டுநா்களான சேலம், மகுடஞ்சாவடியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் பெருமாள் (60), பொள்ளாச்சி, மலையாண்டிபட்டணம் பகுதியைச் சோ்ந்த குங்குமராஜ் மகன் செல்வராஜ் (61), பேருந்தில் பயணித்த பெங்களூருவை சோ்ந்த அங்கமுத்து மகன் பிரபாகரன் (43), கோவிந்தப்பா மகன் பிரகாஷ்(54), குருராஜ் மகன் ராமமூா்த்தி(47), உடுமலை, சின்னவீரப்பன்பட்டியைச் சோ்ந்த முருகவேல் மனைவி கிருஷ்ணவேணி (52), திருப்பூா், பத்மாவதிபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் (59), திருப்பூா், தென்னம்பாளையம் வேலன் நகரைச் சோ்ந்த கதிரேசன் (80), பொள்ளாச்சியைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் ரவிகுமாா் (47), திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரகுபதி (52), திருப்பூா், அனுப்பா்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலு (47), பொள்ளாச்சி, டி.தொட்டம்பட்டி, ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த வரதராஜ்கண்ணன் மனைவி பவித்ரா (26), இவரது மகன் சித்தாா்த் (2) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...