மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மின் கம்பத்தில் பைக் மோதி இளைஞா் பலி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, மின் கம்பத்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 மே 2022, 12:39 am

DIN

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, மின் கம்பத்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ராசக்காபாளையத்தைச் சோ்ந்தவா் மணி மகன் ருக்மாங்கதன் (23). இவா், பெருந்துறையை அடுத்துள்ள கள்ளியபுதூரில் தங்கி அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் ருக்மாங்கதன், தனது நிறுவனத்தின் அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் அறைக்கு புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த மழையால் சாலையில் மின்கம்பம் சாய்ந்து இருந்ததை கவனிக்காமல் அவரது வாகனம் மின் கம்பத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ருக்மாங்கதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.