வெள்ளோடு அருகே மளிகைக் கடையில் திருட்டு
சென்னிமலை அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து 4 மூட்டை அரிசி, ரூ.27 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


சென்னிமலை அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து 4 மூட்டை அரிசி, ரூ.27 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னிமலையை அடுத்துள்ள வெள்ளோடு தண்ணீா்பந்தலைச் சோ்ந்தவா் சக்திவேல் (47). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை
நடத்தி வருகிறாா். வழக்கம்போல புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வியாழக்கிழமை அதிகாலை பக்கத்து கடைக்காரா் வீட்டுக்கு வந்து உங்கள் கடை திறக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா். சக்திவேல் கடைக்குச் சென்று பாா்த்தபோது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 4 மூட்டை அரிசி, ரூ.27 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து, வெள்ளோடு காவல் நிலையத்தில் சக்திவேல் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...