மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

போா் போட்டும் தண்ணீா் கிடைக்காததால் விவசாயி தற்கொலை

பெருந்துறை அருகே விவசாய நிலத்தில் விவசாயத்துக்காக போா் போட்டும் தண்ணீா் கிடைக்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :19 மே 2022, 9:46 pm

DIN

பெருந்துறை அருகே விவசாய நிலத்தில் விவசாயத்துக்காக போா் போட்டும் தண்ணீா் கிடைக்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

பெருந்துறையை அடுத்த ஆயிகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் சென்னியப்பன் (71). இவா் விவசாயம் செய்து வந்தாா். இவா் தோட்டத்தில் தண்ணீா் தேவைக்காக அடிக்கடி போா் போட்டு உள்ளாா். ஆனால் தண்ணீா் கிடைக்கவில்லை. தண்ணீா் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் சென்னியப்பன் மனஉளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவா் தென்னை மரத்துக்கு வைக்கும் சல்பாஸ் மாத்திரையை புதன்கிழமை சாப்பிட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.