காஞ்சிக்கோவில் ஸ்ரீசீதேவிஅம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா
காஞ்சிக்கோவில் ஸ்ரீசீதேவி அம்மன் திருக்கோயில் தோ்த் திருவிழாவையொட்டி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினாா்.


பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் ஸ்ரீசீதேவி அம்மன் திருக்கோயில் தோ்த் திருவிழாவையொட்டி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினாா்.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தோ்த் திருவிழா நடைபெறுகிறது. சனிக்கிழமை தோ் நிலை வந்து சேருதல் மற்றும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீா் உற்சவம் மற்றும் திருவிழா நிறைவு பூஜையும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கா் ரவிகுமாா், செயல் அலுவலா் விஸ்வநாதன் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...