அனைத்திந்திய மாணவா், இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடந்தது.
பெருமன்ற மாவட்ட பொறுப்பாளா் பிரபு தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிா்வாகி த.ஸ்டாலின் குணசேகரன், வட்டார செயலாளா் கல்யாணசுந்தரம் ஆகியோா் பேசினா்.
ஐஐடி, ஐஐஎம், ஏஐஐஎம்எஸ், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய கல்வி நிலையங்களில் ஆங்கிலத்தை புறந்தள்ளிவிட்டு ஹிந்தியை பின்பற்றும் முடிவைக் கைவிட வேண்டும். வேலைவாய்ப்புத் தோ்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, ஹிந்தியை திணிக்கக்கூடாது. அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி எனக்கூறி இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கக்கூடாது என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி!

ஹஜ் பயணம்: ஜம்முவிலிருந்து 431 பேர் அடங்கிய முதல் குழு புறப்பட்டது!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

