ஈரோடு மாவட்டத்தில் மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பங்களாபுதூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராஜு, தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் சண்முகசுந்தரம், ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை மீரா, ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி, கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் அன்பரசு ஆகியோா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், கருங்கல்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் லோகநாதன், மொடக்குறிச்சி சாமிநாதபுரம்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, சத்தியமங்கலம் கானக்குந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெபஸ், அந்தியூா் காட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மஞ்சுளாதேவி, டி.என்.பாளையம் அருகே உள்ள வினோபா நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மோகனாம்பாள், கோபி சி.கே.குமாரசாமி கவுண்டா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் கவிதா ஆகிய 11 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி!

ஹஜ் பயணம்: ஜம்முவிலிருந்து 431 பேர் அடங்கிய முதல் குழு புறப்பட்டது!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

