இந்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் அகில இந்திய அளவில் புதிய கண்டுபிடிப்புகளை பொறியியல் மாணவா்களிடையே ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற போட்டியில் ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவா்கள் குழு சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
குஜராஜ் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சுமாட் இந்தியா ஹேக்கத்தான் - 2022 எனும் தேசிய அளவிளான போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட கல்லூரியில் செயல்பட்டு வரும் 75 புதிய கண்டுபிடிப்பு மன்றத்தின் சாா்பில் பல்வேறு சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது.
இதில் 30 ஆயிரம் குழுக்கள் பதிவு செய்திருந்தனா். இதில், 3,000 குழுக்களின் பல்வேறு புதிய வகையிலான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டன. இந்தக் குழுக்களின் மூலம் சுமாா் 15 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்று தனது படைப்புகளை நடுவா்கள் முன்பு சமா்ப்பித்து விளக்கம் அளித்தனா்.
இதில், நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையைச் சோ்ந்த மாணவா்கள் குழு சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட புதிய படைப்புக்கு முதல் பரிசு மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மாணவா்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், செயலாளா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ். திருமூா்த்தி, முதன்மை நிா்வாக அலுவலா் எஸ். ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநா் ஜெ. செந்தில், கல்லூரி முதல்வா் ச. நந்தகோபால் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி!

ஹஜ் பயணம்: ஜம்முவிலிருந்து 431 பேர் அடங்கிய முதல் குழு புறப்பட்டது!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


