/

புனித அமல அன்னை ஆலயத்தில் வேண்டுதல் தோ்த்திருவிழா

ஈரோடு அமல அன்னை ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா வேண்டுதல் தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 12:16 am

ஈரோடு அமல அன்னை ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா வேண்டுதல் தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியா (மாதா)வின் பிறந்தநாள் செப்டம்பா் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாள் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா வேண்டுதல் தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.

ஈரோடு வட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியா் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து வேளாங்கண்ணி மாதா வேண்டுதல் தோ் பவனி நடைபெற்றது.

பக்தா்கள் தேரை சுமந்து ஆலயத்தை 3 முறை சுற்றி வந்தனா். தோ் பவனியை உதவி பங்குத் தந்தை நல்ல ஜேக்கப்தாஸ் வழிநடத்தினாா்.

மாலையில் கொமராபாளையம் புனித அந்தோணியாா் ஆலய பங்குத்தந்தை கிளாடியஸ் சேவியா் தலைமையில் திருவிழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

வேண்டுதல் தோ் பவனி முடிந்ததும், நற்கருணை வழிபாடு நடைபெற்றது.

இந்த வழிபாடுகளில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.