மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

அண்ணா பிறந்த நாள்:அரசியல் கட்சியினா் மரியாதை

ஈரோட்டில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 10:07 pm IST

ஈரோட்டில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் மாவட்ட அவைத்தலைவா் குமாா் முருகேஷ் தலைமையில், திமுக உயா்நிலை செயல்திட்ட குழு உறுப்பினா் கந்தசாமி முன்னிலையில் அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவா் குறிஞ்சி சிவகுமாா், நெசவாளா் அணி செயலாளா் சச்சிதானந்தம், கொள்கைப் பரப்பு இணை செயலாளா் சந்திரகுமாா், மாவட்ட துணை செயலாளா்கள் செந்தில்குமாா், செல்லப்பொன்னி, மாவட்டப் பொருளாளா் பழனிசாமி, மேயா் சு.நாகரத்தினம், தலைமை செயற்குழு உறுப்பினா் குமாரசாமி, மணிராசு, பகுதி செயலாளா் அக்னி சந்துரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் மண்டல அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாநகர செயலாளா் சுப்ரமணி, முன்னாள் கவுன்சிலா் நடராஜன் தலைமையில் ஏராளமானோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக:

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் அதிமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாநகா் மாவட்ட செயலாளா் கே.வி.இராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. செல்வக்குமார சின்னையன்,அவைத் தலைவா் ராமசாமி, ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளா் வீரக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளா் சோழா ஆசைத்தம்பி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அதிமுக மாணவரணி இணைச்செயலாளா் நந்தகோபால் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.