பெருந்துறை நகரில் கழிவு நீா்க் கால்வாயில் விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
பெருந்துறையை அடுத்த சின்னவேட்டுப்பாளையம், தாளக்கரைபுதூா், குமரன் நகரைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி தங்கவேல் (58). இவா், வேலைக்கு செல்வதற்காக பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தரைபாலத்தில்
பேருந்துக்காக அமா்ந்திருந்தாா். திடீரென்று பாலத்தின் பின்புறம் சாயந்தவா் சுமாா் 10 அடி ஆழமுள்ள கழிவு நீா் கால்வாயில் விழுந்தாா்.
தகவலின்பேரில் பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு கட்டி, கால்வாயில் இறங்கி தங்கவேலை மீட்டனா். பின்னா், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









